‘சமூக மறுமலர்ச்சியை உருவாக்க ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம்’

இதயும் பாருங்க

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இராணுவ தளபதி நியமனம் இலங்கையின் உள்விவகாரம் – வெளிவிவகார அமைச்சு

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இன்று...

வெசாக் காலப்பகுதியில் பௌத்த மதத்தின் உயரிய விழுமியங்களின் அடிப்படையில் பூஜைகளில் ஈடுபட்டு, சமூக மறுமலர்ச்சியை உருவாக்க ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் கூறியுள்ளார்.

பிரதமரின் வெசாக் செய்தி

எதிர்பாராத பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இலங்கை சமூகம் குழப்பமடைந்து, பீதிக்குட்பட்டு வேதனைப்படும் ஒரு நிச்சயமற்ற சந்தர்ப்பத்திலேயே இம்முறை வெசாக் போயா தினம் எம்மை வந்தடைகிறது.

பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் பொருட்கள் மூலமான பூஜைகளை விட்டுத் தவிர்ந்திருக்க வேண்டியேற்படினும், இம்முறை வெசாக் காலத்தில் புத்த மதத்தின் உயரிய பெறுமானங்களின் அடிப்படையில் கொள்கைப் பூஜைகளில் ஈடுபடுவதன் ஊடாக சமூக மறுமலர்ச்சியை எதிர்பார்த்து ஒற்றுமையாக செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

புத்த பெருமான் போதித்த தர்மமானது தனிநபர் ஆன்மீக விடுதலை, பொது சமூக விடுதலையினை நோக்கமாகக் கொண்ட உன்னதமான தர்ம வழிமுறையாகும். புத்த மதத்தின் அடிப்படை அம்சங்களான அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி ஆகிய நான்கு பிரம்மங்களைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு மத்தியில் ஆன்மீக அமைதியையும், பொதுவாக சமூகத்தில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் சந்தேகமில்லை.

பகைமையைக் கொண்டு பகைமையை முறியடிக்க முடியாது எனப் போதித்த புத்த பெருமான், அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமே மீட்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெளிவாக உபதேசித்துள்ளார்.

அதனால் இன, மதரீதியாகப் பிரிந்து நின்று அழிவினை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொருவரினதும் கலாசாரப் பல்வகைமைக்கு மதிப்பளித்து மனிதர்கள் என்ற வகையில் சமாதானத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

இந்த நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாக சிறந்த புரிதலுடன் பொறுமையாகவும், அமைதியாகவும் செயற்பட்டு தேசிய பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மானிடப் பண்புகள் அற்றவனை மானிடப் பண்புகளைக் கொண்டும், பகைமையை அன்பினைக் கொண்டும், சீர்கேட்டினை தர்மத்தைக் கொண்டும், அசத்தியத்தை சத்தியத்தைக் கொண்டும் வெற்றி பெறச் செய்வதற்கு முன்நின்று செயலாற்றும் அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்

சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு முத்திரை வெளியீடு

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண...

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம்...

Episode 58 – கையை அறுத்துக் கொண்டது ஏன்..? மனம் திறந்த மதுமிதா..!

தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியா என்று கேட்டனர், அதனால் கையை அறுத்துக் கொண்டேன். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் மதுமிதா தெரிவித்துள்ளார். Episode 58 -...

More Articles Like This