ரணில் விக்கிரமசிங்க

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வரை ராஜினாமா செய்த அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.