சிவம் மகாதேவன்

இசையமைப்பாளர் டி.இமான் சமீபகாலமாக குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ’கடைக்குட்டி சிங்கம்’, ’விஸ்வாசம்’ மற்றும் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இசையமைப்பாளர் இமான் தான்.

இந்த நிலையில், தற்போது இமான் இசையமைத்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ஜீவா நடித்து வரும் ’சீறு’. ரத்னசிவா இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜீவா, நவ்தீப், ரியாசுமன், சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்

இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வரும் நிலையில் தற்போது அவர் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மகனை இந்த படத்தின் மூலம் பாடகர் ஆக்கியுள்ளார்.

தமிழ்த்திரையுலகில் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் சங்கர்மகாதேவன். அவருடைய இளைய மகன் சிவம் மகாதேவனை ‘சீறு’ படத்தில் இமான் பாடகராக்கியுள்ளார். இந்த தகவலை டி.இமான் தனது சமூக வலைதளப்
பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்