இந்திய மீனவர்கள்

இலங்கையின் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி கடவையில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.