ரோய் டி சில்வா

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரோய் டி சில்வா காலமாகியுள்ளார்.

அவர் தனது 80ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருநத நிலையில், நேற்று இரவு அவர் காலமாகியுள்ளார்.

1937ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறந்த ரோய் டி சில்வா, 1964ஆம் ஆண்டு சுஜாகே ரகச என்ற திரைப்படம் ஊடாக இலங்கை திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல சிறந்த திரைப்படங்களில் நடித்ததுடன், இலங்கை சினிமாத்துறையில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இலங்கை திரைப்பட வரலாற்றில் 1947 ஆம் ஆண்டு உருவான கடவுனு பொருந்துவ திரைப்படத்தை 1982ஆம் ஆண்டு மீள் உருவாக்கம் செய்து ரோய் டி சில்வா ரசிகர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!

Website – www.colombotamil.lk 
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil

#TamilNews, #SriLanka, #Colombo, #lka  #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil