ஊடக அறம், உண்மையின் நிறம்!

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (22) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது பெப்ரவரி 25ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அப்துல்லா முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.