ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய கூட்டணி தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் சிவில் அமைப்புக்கள் பலவும் தமது இணக்கப்பாட்டினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.