Sri Lanka 24 Hours Online Breaking News

புதிய கொரோனா கிருமியால் மேலும் 17 பேர் பாதிப்பு

0

சீனாவின் வூஹான் நகரில், புதிய கொரோனா (Corona) கிருமியால் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூவரின் நிலை மோசமாக உள்ளது. இம்மாதம் 13ஆம் தேதிக்கு முன்னர் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் அந்த நோயாளிகளிடம் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கானோரைப் பலிவாங்கிய சார்ஸ் (SARS) நோய்ப் பரவலுக்கும் கொரோனா வகைக் கிருமியே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சார்ஸ் நோய் சுமார் 650 பேரின் உயிரைப் பறித்தது.

கிருமி பரவி வருவதைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையங்களில் வூஹான் நகரிலிருந்து வரும் பயணிகள் சோதிக்கப்படுகின்றனர்.

அதேபோல அமெரிக்காவின் மூன்று முக்கிய விமான நிலையங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like