ஊடக அறம், உண்மையின் நிறம்!

புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்துக்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் தொடர்பான தகவல்கள், வைத்தியசலை, பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு அமைவாக புதிய வீதி வரைபடம் வெளியிடப்படுவதன் மூலம் நாட்டுக்கு சுற்றுலாப்பயணத்துக்காக வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.