புயலால் செவ்வாய் கிரகத்தில் செயலிழந்த விண்கலம்

புயலால் செவ்வாய் கிரகத்தில் செயலிழந்த விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் வீசிய புயல் காரணமாக காணாமல் போன ஆப்பர்சூனிட்டி ரோவர் மொத்தமாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறு உள்ளனவா? என்பதை குறித்து கண்டறிய ஆப்பர்சூனிட்டி (Opportunity) என்ற ரோவர் விண்கலத்தை, டெல்டா – 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பர்சூனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு பல புகைப்படங்களை அனுப்பி வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் செவ்வாயில் வீசிய புழுதிப் புயல் காரணமாக, இந்த ரோவர் விண்கலம் காணாமல் போனது. புயலின் வேகம் குறைந்தவுடன் ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

புயலில் ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், அதனுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் செய்து கொண்டு செயலாற்றும் இந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக நாசாவுடனான தொடர்பை முற்றிலும் இழந்தது. இதனால் ஆப்பர்சூனிட்டி ரோவரின் செயல்பாடு முடிந்துவிட்டதாக தற்போது நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts