32 C
Colombo
Mon, 06 Apr 2020 05:22:47 +0530

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை

கொரோனோ சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா...
More

  புர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்!

  COVID-19

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  இந்தியாவின் அடையாளமாகவும், பெருமையாகவும் கருதப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பெறுவது வழக்கமான ஒன்றுதான்.

  ஆனால், ரசிகர்கள் விரும்பாத சில காரணங்களால் இதுபோன்ற செய்திகளில் ரஹ்மானின் பெயர் இடம்பெறுவதும் அவ்வப்போது நடைபெறும்.

  2019ஆம் வருடத்தின் தொடக்கத்தில் இப்படி நடைபெற்றது. இதோ இப்போது மீண்டும் அதே போன்ற சம்பவம். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் இம்முறை நேரடியாகவே பதில்கொடுத்து அந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

  2008ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்துக்காக, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இரட்டை விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமையை வாங்கித்தந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

  ஆஸ்கர் வென்று பத்து வருடங்கள் நிறைவடைந்த விழா கடந்த 2019ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த விழாவின் நிகழ்வுகளில் எத்தனையோ தலைப்புச் செய்திகள் இருக்க, ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானின் உடை டாப் நியூஸாக மாறியது.

  விழாவின் மேடையில் ஏற்றப்பட்ட ரஹ்மானின் மகளிடம், ஆஸ்கருக்கு முன்பும் பின்பும் ரஹ்மானின் மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்டது.

  அப்போது பதிலளித்த கதிஜா “என் அப்பாவின் சிறப்பு என்றால் அது ஆஸ்கர் வென்ற பிறகு அவரிடம் அணு அளவுகூட எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை என்பது தான்.

  மாறாக, அவர் எங்களுடன் செலவிடும் நேரம் தான் குறைந்திருக்கிறது. எங்களை சிறு சிறு டிரிப்களுக்கு அழைத்துச் சென்று அதையும் சரிசெய்ய இப்போது முயன்றுகொண்டிருக்கிறார்” என்று கூறியது நெகிழ்ச்சியானதொரு நிகழ்வாக இருந்தது.

  ஆனால், இதனைப் பேசும்போது கதிஜாவின் முகம் முக்காடிட்டு மறைக்கப்பட்டிருந்தது.

  பெயர், புகழ் என சம்பாதித்தாலும் மத ரீதியிலான ‘புர்கா’ அணிவதிலிருந்து தனது குடும்பத்தையே ரஹ்மானால் தடுக்கமுடியவில்லை என்றும், மத ரீதியான அடக்குமுறையை தன் குடும்பத்தின் மீதே ரஹ்மான் பயன்படுத்துகிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

  இதற்கு ரஹ்மான் தரப்பிலிருந்து அவரது மனைவி சைரா, மகள்கள் கதிஜா மற்றும் ரஹீமா ஆகியோர் இடம் பெற்ற ஃபோட்டோ ஒன்று மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.

  அதில், ரஹ்மானின் மனைவி மற்றும் மகள் ரஹீமா ஆகியோர் சாதாரண உடையில் நின்றுகொண்டிருக்க, கதீஜா மட்டுமே புர்கா அணிந்துகொண்டிருந்தார். இதன் மூலம், ‘உடை என்பது எங்கள் வீட்டில் அவரவரின் தேர்வாக இருக்கிறதே தவிர யாரும் கட்டாயப்படுத்தப்படல்லை’ என்பதை வெளிப்படுத்தினார் ரஹ்மான்.

  அத்துடன் “என் வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் அளவுக்கு எனக்கு வயதும் பக்குவமும் இருக்கிறது. ஒவ்வொரு மனித உயிருக்கும், தான் என்ன உடை அணியவேண்டும் என்பதையும், என்ன செய்யவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது.

  உண்மையான சூழல் புரியாமல் நீங்களாக எந்த தீர்ப்பையும் கொடுக்கவேண்டாம்” என்று கதீஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

  இப்படி அடங்கிப்போன பிரச்சினையை இப்போது மீண்டும் கையிலெடுத்த பெங்காலிய எழுத்தாளரான டஸ்லிமா நஸ்ரினுக்கு மீண்டும் பதிலளித்திருக்கிறார் ரஹ்மானின் மகள் கதீஜா.

  டஸ்லிமா நஸ்ரின், பெங்காலிய எழுத்தாளரான இவரது படைப்புகள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

  இஸ்லாமிய மதத்தில் பிறந்து, அந்த மதத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியதாலும், எழுதியதாலும் பங்களாதேஷ் நாட்டிலிருந்தே ஒதுக்கிவைக்கப்பட்டவர் இவர்.

  புர்கா அணிவதன் மூலம் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து வாதிட்டு வரும் டஸ்லிமா, சமீபத்தில் கதீஜாவின் புர்கா அணிந்த ஃபோட்டோவை பகிர்ந்து “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்புகள் நிச்சயமாகப் பிடிக்கும்.

  ஆனால், அவரது அன்பான மகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒருவித புழுக்கம் ஏற்படுகிறது. ஒரு கலாச்சாரமான குடும்பத்தில் பிறந்து படித்தவராகவும் இருக்கும் பெண்கள் கூட, எளிதாக மூளைச்சலவை செய்யப்பட்டுவிடுவதைப் பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாக இருக்கிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.

  டஸ்லிமாவின் ட்வீட் நெட்டிசன்கள் மத்தியிலும், அவர்களைத் தாண்டியும் விவாதங்களை ஏற்படுத்த, இதற்கு தானே முன்வந்து பதில் கூறியிருக்கிறார் கதீஜா.

  “ஒரு வருடம் தான் ஆகியிருக்கிறது. ஆனால், இந்த டாபிக் மீண்டும் சுற்றிக்கொண்டிருக்கிறது. நாட்டில் மக்களின் கவனம் தேவைப்படும் விதத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க, ஒரு பெண் என்ன உடை அணியவேண்டும் என்பது குறித்த உரையாடல் இப்போது அவசியமானதா.

  எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு முறை இந்த டாபிக் பேசப்படும்போதும், எனக்குள் ஒரு நெருப்பு உருவாகி என்னைப் பல விஷயங்களைப் பேசத் தூண்டுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இதுவரை கண்டிராத பல மாற்றங்களை நான் எனக்குள் கண்டேன்.

  நான் மிகவும் பலவீனமான பெண்ணாக, நான் எடுத்த முடிவுகள் குறித்து வெட்கப்படமாட்டேன். நான் எப்படி இருக்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். என்னை இப்படியே ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி.

  நான் செய்யும் செயல்கள் கண்டிப்பாக பேசும். மேற்கொண்டு நான் எதையும் பேச விரும்பவில்லை. நான் இதை ஏன் இப்போது கொண்டுவருகிறேன் என்று தெரியாதவர்களுக்காக ஒருவர் தனக்காக எப்போதுமே பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.

  டஸ்லிமா நஸ்ரின், என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். தயவு செய்து வெளியில் சென்று நல்ல காற்றைப் பெறுங்கள்.

  ஏனென்றால், நான் புழுக்கமாக உணரவில்லை; நான் என்ன செய்கிறேனோ அதில் பெருமையும், ஊக்கமும் பெறுகிறேன். கூகிளில் தேடி எது பெண்ணுரிமை என்று படியுங்கள். ஏனென்றால், மற்ற பெண்களை இழுத்து, அவர்களது அப்பாவிற்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை.

  அதேசமயம், என் ஃபோட்டோவை அனுப்பி உங்களிடம் அபிமானம் கேட்டதாக எனக்கு நினைவில்லையே” என்று கதீஜா இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தகவல் வெளியிட்டார்.

  டஸ்லிமாவின் பேச்சுக்கு எழுந்த ஆதரவைவிட, கதீஜாவின் பேச்சு க்கு அதிக ஆதரவு நெட்டிசன்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது. டஸ்லிமாவுக்கு பதில் கூறியதுடன் நிறுத்திவிடாமல் பொது சமூகத்துக்கான சில கேள்விகளையும் இன்று முன்வைத்திருக்கிறார் கதீஜா.

  இதுகுறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் “ஒரு நம்பிக்கையைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட இரட்டை நிலைகள் உருவாகின்றன.

  டர்பன் அணிந்த ஆண்களை நாம் பார்க்கவில்லையா? ஹபிட் அணிந்த பெண்களைக் கண்டதில்லையா? ஆனால் ஏன் குறிப்பிட்ட நம்பிக்கையைச் சேர்ந்த பெண்கள் முழு மனதுடனும், பெருமையுடனும் அணியும் உடையை டார்கெட் செய்து பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

  ஏன், ஏன், ஏன் என எனக்கு சுத்தமாகப் புரியவில்லை” என்று இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கேட்டிருக்கிறார்.

  சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest...