Colombo Tamil News

மது போதையில் பெண்ணொருவரின் கையைப்பிடித்த 49 வயதான நபர் ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

குறித்த பெண் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.