பாலியல் வன்புணர்வு

வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை, நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் மக்கள் நடமாட்டத்தை அறிந்த இளைஞன் பெண்ணை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.