இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வர்த்தக வரி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி 20 ரூபாயால் அதிகரிப்படவுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.