பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வைத்து பட புரோமோஷனா ?

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வைத்து பட புரோமோஷனா ?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வரும் நிலையில் அந்த ஹேஷ்டேக்குகள் பட புரோமோஷனுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதும் எதிரொலித்துள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் நேற்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #PunishTheRapists, #PollachiRapists, #PunishTheRapists, #JusticeForWomen போன்ற ஹேஷ்டேக்குகள் அதிக அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இதனிடையே இந்த ஹேஷ்டேக்குளை படக்குழு ஒன்று அப்படத்தின் புரோமோஷனுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட படம், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தண்டிக்கும் விதமான படம் என்பதால் அதுபோன்ற ஹேஷ்டேக்குகளை படக்குழு பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டர்வாசிகள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் சிறிய வீடியோ க்ளிப்களை இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி, பதிவு செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related posts