ஊடக அறம், உண்மையின் நிறம்!

பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : ஒருவர் கைது

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த, திருச்சியை சேர்ந்த ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்பதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்சியில் போலி பெயரில் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தனிப்படை பொலிஸாரின் தீவிர நடவடிக்கையால் திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘நிலவன் ஆதவன்’ என்ற போலி கணக்கின் மூலம் ஃபேஸ்புக்கில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து இவரை பொலிஸார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொந்த குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞன் கைது

காதலுக்கு இடையூறு செய்த பெண் கொலை: சிறுமி கைது; சிறுவன் தப்பியோட்டம்

Leave A Reply

Your email address will not be published.