இந்தியாபெட்டிக்கடை

பேஸ்புக் காதலியை 4 மணி நேரத்தில் மனைவியாக்கிய இளைஞன்

பேஸ்புக்கில் காதலித்த பெண்ணை நேரத்தில் பார்த்த 4 மணி நேரத்தில் அவரை மனைவியாக்கியுள்ளார் கொல்கத்தா இளைஞன்.

கொல்கத்தாவைச் சேர்ந்த சுதிப் கோஷல் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரித்மா பானர்ஜி என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் நண்பரானார்.

இரண்டு நாயகிகளுடன் ஆட்டம்போடும் சந்தானம்

இவர்கள் தினமும் பேஸ்புக்மூலம் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவுமில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் இருக்கும் பகுதியிலிருந்த கோவிலில் துர்கா பூஜை நடந்தது. கோவிலுக்கு இருவரும் ஒரே நேரத்தில் வந்த நிலையில் எதிர்ச்சியாக இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் ஹனிமூன் புகைப்படங்கள்!

அப்பொழுது இவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுப் பேசினர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த உரையாடலின் முடிவில் சுதிப் தன் காதலை பிரத்மாவிடம் வெளிப்படுத்தினார். ஏற்கனவே சுதிப் மீது காதலிலிருந்த பிரித்மாவும் காதலை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்பொழுது சுதிப் தனக்கு சம்பிரதாயங்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. கடவுள் முன்னிலையில் நெற்றியில் பொட்டு வைத்து உன்னை இப்பொழுதே திருமணம் செய்துகொள்ளத் தான் தயார் என கூறினார்.

விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு கல்யாணம்! மணப்பெண் யார் தெரியுமா 

இதை பிரித்மாவும் ஏற்றுக்கொண்டதால் கோவிலேயே பிரித்மாவின் நெற்றியில் பொட்டு வைத்து தன் மனைவியாக்கினார். இவ்வாறு திருமணம் செய்த செய்தி வைரலாக பரவியது.

இந்த நிலையில், இவர்கள் மீண்டும் தங்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close