பொகவந்தலாவையில் மாணவி சடலமாக மீட்பு

பொகவந்தலாவையில் மாணவி சடலமாக மீட்பு

பொகவந்தலாவை, டின்சின் தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் சடலம் இன்று வெள்ளிகிழமை அதிகாலை 05.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி அதிகாலை 03 மணியளவில் கற்றல் நடடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்றுவரும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஆகியோர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மாணவியின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts