‘பொலிஸாருக்கு இராணுவம் ஒத்துழைக்கும்’

‘பொலிஸாருக்கு இராணுவம் ஒத்துழைக்கும்’

பாதாள உலகக்குழுக்களை அழிப்பது தொடர்பில் இராணுவம் தமது அதிகபட்ச ஒத்துழைப்பினை பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்கும் என, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள பாதாள உலகக்குழுவினரை ஒழிப்பது தொடர்பில் இராணுவத்தால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இராணுவ தளபதி, அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொலிஸாருக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸார் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts