சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாத இறுதியில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் ஊதியத்தை அளிக்கவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுக்க மறுத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தி ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து வடபழனி, அண்ணாநகர், பெரம்பூர், பூந்தமல்லி, அம்பத்தூரில் மாநகர பேருந்துகளை பணிமனையில் இருந்து இயக்காமல் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்டத்தால் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.