போயிங் 737 MAX ரக விமானங்கள் தற்காலிகமாக இரத்து

போயிங் 737 MAX ரக விமானங்கள் தற்காலிகமாக இரத்து

போயிங் 737 MAX ரக விமானத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாய் நிறுத்திவைப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

ஒன்றியத்தின் விமானத்துறைப் பாதுகாப்பு அமைப்பு அதனைத் தெரிவித்தது.

அந்த ரக விமானங்களை முடக்கி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை சேர்ந்துள்ளன. இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் போயிங் 737 MAX ரக விமானங்களை முடக்கி வைப்பதற்கு அதிக நெருக்குதலை எதிர்நோக்கியுள்ளது.

விமான உற்பத்தியில் உலகின் ஆகப் பெரிய நிறுவனமான போயிங், தனது விமானங்களை முடக்கிவைக்கும் நாடுகளின் நடவடிக்கையைப் புரிந்துகொள்வவதாகத் தெரிவித்தது.

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அதே வேளையில் 737 MAX ரக விமானங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.

அந்த ரகததைச் சேர்ந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்று இதுவரை தெரியவில்லை. 5 மாதங்களுக்கு முன் அதே ரக விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது. அதில் 189 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு விபத்துகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts