‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்து காதல் வலை வீசி இளவட்டங்களை கவர்ந்ததால் நடிகை பிரியா வாரியர் பெயர் பாலிவுட்வரை பரவியது.

எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் வெற்றியை ஈட்டாததால் பிரியாவாரியருக்கு அடுத்த படம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஒரு வழியாக இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த திறமையை வெளிப்படுத்தும் விதமாக சொந்த குரலில் பாட்டு பாடி அதை நெட்டில் பரவவிட்டார்.

நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படத்தில் பாடுவதற்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் ‘பைனல்ஸ்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகிறார். இதையடுத்து ‘கா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார்.

1991ம் அண்டு மோகன்லால் நடித்து வெளியான ‘அபிமன்யு’ படத்தில் இடம்பெற்ற, ‘ராமாயண காற்றே..’ என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளது.

அப்பாடலுக்குத்தான் பிரியா வாரியர் நடனம் ஆட உள்ளார். ஓவர்நைட் ஹீரோயின் ஆன நிலையில் இப்போது ஒரு பாடலக்கு நடனம் ஆட வந்துவிட்டோமோ என்று சலிப்பில் இருக்கிறார் பிரியா. கவலைப்படாதீர்கள் உங்களுக்கான வாய்ப்பு வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வரும் என்று அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்