ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

இதயும் பாருங்க

முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை

நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை...

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய...

‘ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டி’

ஜனாதிபதி தேர்தலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ப.சிதம்பரம் இன்று, சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ப.சிதம்பரம் கைது குறித்து குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. மத்திய பாஜக அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது.”

கார்த்தி சிதம்பரம்

“இந்தியாவில் உள்ள முக்கிய விவகாரங்களை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க யாரையோ திருப்தி படுத்த இதை செய்கிறார்கள். என் தந்தை தலைமறைவாக இருந்தது இல்லை. ஒரு தனி மனிதர் 24 மணி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”

திருமாவளவன்

“ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல; நாட்டின் உள்துறை, நிதி அமைச்சராக இருந்தவர். அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.”

டி.கே.எஸ்.இளங்கோவன்

“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்பிணை விசாரணைக்கு வரும் நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.”

கராத்தே தியாகராஜன்

“எந்தவித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸை வழிநடத்தும் அளவிற்கு தகுதியானவர் ப.சிதம்பரம். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?.”

மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

“நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ப.சிதம்பரம் கைது காட்டுகிறது. எந்த சட்ட வரையறைக்கும் உட்பட்டு ப.சிதம்பரம் கைது செய்யப்படவில்லை. ப.சிதம்பரம் வெளிநாடோ அல்லது வேறு எங்கேயோ சென்று தலைமறைவாகி விடமாட்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.”

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This