“மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு தயார்”

“சிறிகொத்த – கமட்ட” வேலைத்திட்டத்தின் ஊடாக, கிராம மட்டங்களில் கட்சி மீள புணரமைப்பு செய்யவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சியில் இருக்கும் போதே, அரசியல்வாதிகள் பொதுமக்கள் மத்திக்கு செல்வதுதான் வழமை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கும், கட்சியை புணரமைப்பதற்கும், உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கும் எதிர்கட்சியில் உள்ளவர்கள்தான் மக்களை தேடி செல்வார்கள்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்குள் இருந்தவாறு மக்கள் மத்தியில் செல்வதற்கும் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கும் கட்சியை புணரமைப்பதற்கும், உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டமே கமட்ட சிறிகொத்த என்ற வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Related posts