மதூஷை கைதுசெய்ய தடைவிதிக்குமாறு கோரி மனு

141
ஐக்கிய தேசியக் கட்சி
colombotamil.lk

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக்குழுவின் தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதூஷை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாகந்துர மதூஷின் தாயின் சகோதரியான சூரியவெவ பகுதியை சேர்ந்த ஏ.டபிள்யூ சிறியானி என்பவரே இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி உட்பட ஐவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் உள்ள மாகந்துர மதூஷ் என்பவரை கைது செய்வதற்கு பொலிஸார் அடிப்படையற்ற விதத்தில் செயற்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.