ஊடக அறம், உண்மையின் நிறம்!

மனசாட்சிப்படி நடந்தால் போதும்: நந்துனி மதுரங்கி

நடிப்புத்துறையில் நீண்ட பயணம் செய்வதுதான் அவள் கனவு, நந்துனி மதுரங்கி  என்ற சிங்கள திரையுலக நடிகை ரசிகர்களுக்காக அளித்த பேட்டி.

முதலில் நீங்கள் உங்களை பற்றி சுருக்கமாக விவரிக்கிறீர்களா?

என் பெயர் நந்துனி மதுரங்கி வீரசிறி. நான் என் அம்மா, அப்பா மற்றும் சகோதரியுடன் களுத்துறையில் வாழ்கிறேன். தற்போது சினிமா துறையில் பணியாற்றுக்கின்றேன்.

எப்போது நீங்கள் சினிமா துறையில் இணைந்தீர்கள்?

2016ஆம் ஆண்டு கடைசி நேரத்தில்.

ஏன் இந்தத் துறையை தேர்வு செய்தீர்கள்?

இது என் கனவு. உண்மையில் நான் சிறு வயதில் இருந்து இந்த துறையில் இணைய விரும்பியிருந்தேன்.

உங்கள் விருப்பத்தை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா?

இல்லை. என் அப்பா மிகவும் எதிர்த்தார். அம்மாவும் அதனை விரும்பவில்லை. ஆனால் இப்போது அவர்கள் எதுவும் சொல்வதில்லை.

இந்த துறையில் நிறைய தவறு இருக்கிறதா?

ஆமாம். அதனால்தான் குடும்பத்தினர் அதை விரும்பவில்லை. இருந்தாலும் நாம் ஒழுங்காக இருந்தால் பிரச்சினை இல்லை.

ஆனால் அனைவருக்கும் எதிராக குற்றச்சாட்டு வருகிறதுதானே?

ஆம், அது உண்மைதான். எப்போதும் ​மனசாட்சியின் படி செயல்படுவதுதான் சிறந்தது.

சினிமாத்துறைக்கு பங்களிப்பு செய்ய நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?

நான் இன்னும் ஓவியம் படிக்கிறேன். நான் அதை சொல்ல விரும்புகிறேன். தற்போது, புகைப்படப்பிடிப்பு மட்டும்தான் நிறைவுபெற்றுள்ளது.

நடிப்பு தொடர்பில் உங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளதா?

இருக்கின்றது, திரைத்துரையில் நுழைவதற்கு முன்னர், சினித்துறையினருடன் இணைந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களது எதிர்பார்ப்பு என்ன?

என் ஒரே நம்பிக்கை சினிமாத்துறையில் முன்னணிக்கு செல்ல வேண்டும் என்பதே.

இந்த பயணத்தில் உங்களுக்கு உதவியவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

உண்மையில், நான் முதலில் என் அம்மா மற்றும் என் காதலன் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் என் பின்னால் நிற்கிறார்கள். கூடுதலாக, ரஞ்சுல அண்ணா, அனிலா அண்ணா, நான் குறிப்பாக சொல்ல முடியாது, ஆனால் இந்த நேரத்தில் எனக்கு பலரின் முழு ஆதரவு கிடைத்தது. அவர்களை அனைவருக்கும் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.