மனைவி கொலை; கணவனுக்கு பொலிஸார் வலைவீச்சு

34
கொலை
W3Schools

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, மனைவியை கத்தியால் வெட்டிக் கணவன் கொலை செய்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய வி. காந்தரூபி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸார் அவரை தேடி வலைவிரித்துள்ளனர்.

W3Schools