ஊடக அறம், உண்மையின் நிறம்!

மன்னார்- பேசாலை புனித வெற்றியன்னையின் வருடாந்த பெருவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை பங்கின் பாதுகாவலியாம் புனித வெற்றியன்னை ஆலய வருடாந்த பெருவிழாவானது பங்குத்தந்தை அருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜா அடிகளார் தலைமையில் கடந்த ஒன்பது நவநாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு பத்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (08) பெருவிழா இடம்பெற்றது.

இவ் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை (07) நற்கருணை பெருவிழாவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் வழிபாடுகளும் நற்கருணை பவனியும் இடம்பெற்றன.

இன்று (08) மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இதனைத் தொடர்ந்து திருச்சுரூப பவனியும் இடம்பெற்று அன்னையின் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டு சிறப்பாக நிறைவுபெற்றது.