இந்தியாகட்டுரைதலைப்புச் செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அவரை பற்றிய சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

சுதந்திர இந்தியாவின் 13ஆவது பிரதமரான மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் செப்டம்பர் 26, 1932ஆம் ஆண்டு பிறந்தார்.

படிப்பில் கெட்டிக்காரரான மன்மோகன், 1957ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார்.

தொடர்ந்து 1962ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில். பட்டம் பெற்றார்.

 மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

1970 முதல் 1980 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பொருளாதாரக் கல்வி நிலையங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

யூஎன்சிடிஏடி (UNCTAD) செயலகத்திலும் குறுகிய காலம் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து 1987 மற்றும் 1990ம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சவுத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

மே 22, 2004 ஆண்டு இந்திய வரலாற்றில் இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். அதற்கு முன்பாக 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார்.

பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் ஆரம்பத்தில் பெரும்பங்கு வகித்தார்.

மேலும், இந்திய நிதி அமைச்சக செயளாலர், நிதித் துறை அமைச்சர், திட்ட கமிஷனின் துணைத் தலைவர், மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் என அரசு எந்திரத்தின் அதிமுக்கியமான பொறுப்புகள் பலவற்றையும் வகித்தார்.

‘‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்கு மற்றும் தன்னிறைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள்’’ என்ற அவருடைய புத்தகம், இந்தியாவின் உள்நோக்கு அடிப்படையிலான வர்த்தகக் கொள்கை பற்றி முழுமையாக அலசும் நூலாகப் பார்க்கபப்டுகிறது.

இந்தியாவின் திறமையான பொருளியலாளர்களில் ஒருவரான இவர்தான், இந்தியாவில் மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

விருதுகள்

இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் 1987 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காக ஆசியச் செலாவணி விருது (1993 மற்றும் 1994) பெற்றார்.

சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956), கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் மிகச்சிறப்பான மாணவராக இருந்ததற்காக ரைட்ஸ் பரிசு (1955) ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.

ஜப்பானின் நிஹான் கெய்ஜாய் ஷிம்புன் உள்ளிட்ட பல்வேறு உயரிய சங்கங்களின் கௌரவங்களையும் டாக்டர் சிங் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் கவுரப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

சுகாதார அமைச்சின் விசேட அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close