‘மற்றுமொரு வேட்பாளருக்கு மொட்டு அணியினர் தயார் இல்லை’

52
W3Schools

ராஜபக்ஷ குடும்பத்தினரை தவிர்த்து மற்றுமொருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த , ஒன்றிணைந்த எதிரணியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் விருப்பப்பட மாட்டார்கள் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலி, கராப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், தேவையான நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது பொதுவேட்பாளரை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools