மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்

மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் சட்டவிரோதமான என தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக நியமிக்க மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை சட்டவிரோதமானது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த டிசெம்பர் 16ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில், தற்போது குறித்த மனு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts