மஹியங்கனை விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம் வெளியானது

46
W3Schools

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த ஜுட் ஹென்றிக் (48வயது), அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி (42வயது), மகன் ஜு.ஹெய்ட் (19வயது), மகள் ஷெரேபி (10வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த லிஸ்டர் (34வயது), அவரது மனைவி நிசாலி (27வயது), இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ் (56வயது), செல்பியா (53வயது) ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools