மாகந்துர மதூஸுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை

38
விளக்கமறியல்
W3Schools

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலககுழு தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதூஸ் மீது, குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகந்துர மதூஸை டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த பின்னர், அவருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாகந்துர மதூஸுக்கு எதிராக தற்போது கிடைத்துள்ள சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் மாகந்துர மதூஸை டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

W3Schools