பாதாள உலக குழு

பொகவந்தலாவை, டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர், இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக மிகவும் ரகசியமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை மற்றும் டின்சின் பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் கூறினர்.