மானிப்பாய்

வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டிடத் தொகுதி இன்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளது.

பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் இப் புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிரதம விருந்தினராகக் கலந்த கொண்டு கட்டத் தொகுதியை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வட மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் போக்குவரத்துக்கு திறந்துவைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம் நாளை திறந்துவைப்பு

மோசமான உடையில் வந்த சமீரா ரெட்டி