மாற்று கட்சிக்கான தேவை தொடர்பில் மஹிந்த கருத்து

42
மஹிந்த ராஜபக்ஷ
W3Schools

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்பட்டமையினாலேயே பொதுஜன முன்னணியினை உருவாக்கியதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இதுவரை விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன முன்னணி என்ற புதிக கட்சியின் தேவை நாட்டுக்கு காணப்பட்ட நிலையில், கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது பிரதான சக்தியாக அதனை மக்கள் மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மின்சாரத்தினை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய எதிர்ப்பார்ப்பதன் மூலம் இலாபம் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களை இருளில் வைத்தேனும் தமது பைகளை நிறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

W3Schools