நேர் கொண்ட பார்வை

மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை இவரா?

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு தனது அடுத்த படத்துக்கு அஜித் தயாராகியுள்ள நிலையில், அந்த படத்தின் கதாநாயகி பற்றின தகவல் வெளியாகியுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இந்த படத்தில், தல அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். அதே சமயம் படத்தில் அதிக பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

அடுத்த கட்டமாக படத்தில் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

நயன்தாரா தளபதி விஜயுடன் பிகில் படத்தில் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இவர் சில படங்களில் நடிக்க உள்ளதால், கோல்ஷீட் பிரச்சனை உள்ளதாம்.

நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் யார் ஜோடி என்று தெரிய வரும். இதற்கு முன் விஸ்வாசம், ஏகன், பில்லா ஆகிய படங்களில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk