முகமது ஷமிக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐயின் மெகா பிளான்.. காரணம் இதுதான்!

நடக்கவுள்ள துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர் முகமது ஷமி தெரிவு செய்யப்படாதமைக்கான காரணம் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

முகமது ஷமிக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐயின் மெகா பிளான்.. காரணம் இதுதான்!

நடக்கவுள்ள துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர் முகமது ஷமி தெரிவு செய்யப்படாதமைக்கான காரணம் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபியில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் விளையாட உள்ளனர்.

இந்த உள்ளூர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரைத் தவிர அனைத்து இந்திய வீரர்களும் இடம்பெற்று உள்ள நிலையில், முகமது ஷமியின் பெயர் இல்லை.

இனி இந்திய அணியில் இடமில்ல... இளம் வீரருக்கு நேர்ந்த கதி.. ஐபிஎல் தான் ஒரே வழி
 
முன்னதாக வங்கதேச டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடக் கூடும் என தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்த போதும், இப்போதைக்கு அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ தீர்மானித்து உள்ளது.

ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி ஓய்வில் உள்ளதுடன், சில வாரங்களுக்கு முன்பு தனது பயிற்சியை ஆரம்பித்தார்.

இந்த நிலையில், வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்க, நடக்கவுள்ள எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும்.

அந்த  நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடினமானவை என்பதால் முகமது ஷமியை அந்த இரண்டு தொடர்களிலும் பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

அதனால், தற்போது சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமியை வங்கதே டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனால், அவரை துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்,  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடக்கவுள்ள ரஞ்சி ட்ராபி தொடரில் பெங்கால் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளார்.

அதன் பின்னர் நியூசிலாந்து தொடரில் முகமது ஷமி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp