Sri Lanka 24 Hours Online Breaking News

முதலாவது T20; நியூஸிலாந்து அணி வெற்றி

0

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ரோஸ் டெய்லர் 48 ஓட்டங்களையும் கிராண்ட் ஹோம் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் லசித் மாலிங்க 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like