ஊடக அறம், உண்மையின் நிறம்!

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்

புலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாமை ஊடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று (20) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.ரீ.பி தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மனுக்கள் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியவர்கள் சார்ப்பில் தொடர்ந்தும் சட்டமா அதிபர் ஆஜராக போவதில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்க மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பர்சானா ஜமில் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவர்கள் சார்பில் தனிப்பட்ட நீதிபதிகள் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

அத்துடன் குறித்த மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.