இலங்கைவடக்கு - கிழக்கு

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார் ஆலயத்தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றுள்ளனர்.

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ,மணிவண்ணன் ,சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் 15 நிமிடங்கள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close