Sri Lanka 24 Hours Online Breaking News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 59 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

0

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 59 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர்திறப்பும் விநாடிக்கு 50ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 21 ஆயிரத்து 725 கனஅடி நீர்வெளியேற்றப்படுகிறது.

இரு அணைகளும் நிரம்பியிருந்தாலும், நீர்வரத்து குறைந்திருப்பதால், வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பிலிகுண்டுலு வழியாக நேற்று விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருந்த நீர், இன்று 55 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று 21,725 கன அடியாக குறைந்துள்ள நிலையில், பிலிகுண்டுலு வழியாக வரும் நீரின் அளவு வரும் நாட்களில் மேலும் குறையும்.

இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லில் காவிரியில் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து ஏழாவது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க 37வது நாளாக தடை நீடிக்கிறது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 59 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து, நேற்று விநாடிக்கு 65 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, 50 ஆயிரத்து 900 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.70 அடியாகவும், நீர்இருப்பு 94.59 டிஎம்சி ஆகவும் உள்ளது.

டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடி நீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் கதவனையில் நீர்வரத்து விநாடிக்கு 61,650 கனஅடியாக உள்ளது. நேற்றைய நீர்வரத்து 76,100 கனஅடியாக இருந்த நிலையில், இன்று சுமார் 15ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

75 மதகுகள் வழியாக காவிரியில் 60 ஆயிரத்து 50 கனஅடி நீரும், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும், புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் 400 கனஅடியும், தென்கரை பாசன வாய்க்காலில் 800 கனஅடியும் நீர்வெளியேற்றப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like