Sri Lanka 24 Hours Online Breaking News

மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டி – இந்தியா 260 ஓட்டங்கள் முன்னிலை

0

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானே (81 ரன்), ரவீந்திர ஜடேஜா (58 ரன்) ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் (10 ரன்), மிக்யூல் கம்மின்ஸ் (0) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீசின் எஞ்சிய 2 விக்கெட்டுகளும் மேற்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்து ஆச்சரியப்படுத்தியது.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like