Sri Lanka 24 Hours Online Breaking News

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தவானுக்கு பதிலாக மாயங்க் சேர்ப்பு

0

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.

முதலில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடம்பெற்று இருந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டதால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனால் ஷிகர் தவானுக்கு பதிலாக கர்நாடக அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் சையத் முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.

தினேஷ் சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like