மோடி - சீன ஜனாதிபதி சந்திப்பு

இந்திய பிரதமர் மோடி- சீன ஜகாதிபதி சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆராய்ந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அப்போது அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சிறப்பு மிகுந்த இடங்களையும் பார்வையிட உள்ளனர்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றம், உட்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உத்தரவிட்டார்.

தலைவர்கள் இருவரும் நடந்து செல்வதற்கான நடைபாதை அமைக்கும் பணிகள், புல்தரை அமைக்கும் பணிகள், சிற்பங்களை இரவிலும் கண்டுகளிக்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play