ஊடக அறம், உண்மையின் நிறம்!

யாசகம் வாங்கி நிதி திரட்டிய சந்திரபாபு நாயுடு

அமராவதி தலைநகர் போராட்டத்திற்காக, திருப்பதி நகர வீதிகளில் யாசகம் வாங்கி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நிதி திரட்டினார்.

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், தற்போதய ஆந்திர மாநிலத்திற்கு அமராவதி உட்பட விசாகப்பட்டினம், கர்ணுால் ஆகிய நகரங்களையும் மாநில தலைநகரங்கள் ஆக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது.

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு, தற்போதைய தலைநகர் அமராவதியை, சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை, நிர்வாகத் தலைநகராகவும், கர்ணுாலை, நீதி பரிபாலன தலைநகராகவும் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், அமராவதியில் ஒட்டுமொத்த தலைநகரத்தை ஏற்படுத்த அரசுக்கு, 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள், அரசின் முயற்சிக்கு எதிராக, 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு, தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், இக்கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அமராவதி தலைநகர கூட்டு போராட்ட குழு, தங்களுடைய போராட்டத்தை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று மாலை திருப்பதிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, கூட்டு போராட்ட குழுவினர், திருப்பதி நகர வீதிகளில், பொதுமக்களிடம் யாசகம் வாங்கி, அமராவதி தலைநகர போராட்டத்துக்கு நிதி திரட்டினர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.