தலைப்புச் செய்திகள்விளையாட்டு

ரசிகர்கள் இல்லாமல் இரண்டு F1 கார்ப் பந்தயங்கள்

இரண்டு F1 கார்ப் பந்தயங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் பந்தயத் தடம் முன்வந்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த ஆண்டிற்கான Formula one கார்ப் பந்தயங்கள் இன்னும் தொடங்கவில்லை.

அதனால் இந்த ஆண்டு பந்தயங்கள் குறைக்கப்படும் அல்லது வேறு திகதிகளுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வேளையில், சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்தில் இரண்டு பந்தயங்களை ஒரே வாரத்தில் நடத்தலாம் அல்லது அடுத்தடுத்த வாரங்களில் நடத்தலாம் என்று அதன் தலைவர் ஸ்டூவர்ட் பிரிங்கல் (Stuart Pringle) விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு பருவத்தில் ஒரே தடத்தில் இரண்டு பந்தயங்கள் நடந்ததில்லை, ஆனால் தங்களிடம் உள்ள வசதிகள், அனுபவங்களால் பந்தயங்களை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்று ஸ்டூவர்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close