ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்

89
தர்பார்
colombotamil.lk

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் 167ஆவது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

’தர்பார்’ படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.

இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிச்சியை அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!