ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜுனில் விசாரணை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜுனில் விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான முறைப்பாட்டினை எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் நீதியரசர் நளின்பெரேரா, நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ரஞ்சன் ரமாநாயக்க, இந்நாட்டில் உள்ள நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என
குறிப்பிட்டிருந்தார்.

இதன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts