Sri Lanka 24 Hours Online Breaking News

ரணில்- சஜித் இன்று சந்திப்பு?

0

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி வேட்பாளர் தொடர்பாக ஒரு முடிவை எடுக்குமாறு ஐதேக தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், முன்னரே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக சஜித் பிரேமதாச தெரியப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, இன்று வரை இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பெரும்பாலும் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்தார் தயாசிறி ஜயசேகர


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like